ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியை துவம்சம் செய்த ஒற்றை யானை! - நவமலை மின் உற்பத்தி நிலையம்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானையின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சூறையாடப்பட்டன.

யானையால் இடிக்கப்பட்ட வீடு
author img

By

Published : Apr 22, 2019, 9:36 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் நவமலை மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதனைசுற்றி, மின் பணியாளர்கள் குடும்பம், மலைவாழ் மக்கள் என 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த இடம், ஆழியார் அணை வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் இங்கு மான், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு யானை, காட்டுப் பன்றி என விலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.

தற்போது, கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் காட்டு யானைகள் நீர்நிலைப் பகுதியான ஆழியார் அணைப் பகுதிக்கு படையெடுக்கின்றன.

ஒற்றை யானை அட்டகாசத்தில் வீடுகள் நாசம், பொள்ளாச்சி, polaachi, elepant smashes house
ஒற்றை யானை அட்டகாசத்தால் வீடுகள் சேதம்

இந்நிலையில், நேற்று இரவு நவமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து ஒற்றை யானை, முருகன், பழனிமுத்து ஆகியோரின் வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், காட்டுயானையை விரட்டி அடித்தனர். மேலும், ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையிலான வனக் காவலர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஒற்றை யானை அட்டகாசத்தால் சூறையாடப்பட்ட வீடுகள்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் ஒற்றை யானை அட்டகாசம். பொள்ளாச்சி- 22 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலை மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு மின் பணியாளர்கள் குடும்பம் மற்றும் மலைவாழ் மக்கள் என 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி ஆழியார் அணை வன பகுதி ஒட்டி உள்ளதால் இங்கு மான், புலி, சிறுத்தை, கருசிறுத்தை, காட்டு யானை, காட்டு பன்றி என விலங்குகள் ஊருக்குள் வருகின்றனா.கோடை காலம் தொடங்கியதால் காட்டு யானைகள் நீர் நிலை பகுதியான ஆழியார் அணை பகுதியில் படையெடுகின்றனா இன்று இரவு நவமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் புகுந்த ஒற்றை யானை அப்பகுதியில் உள்ள முருகன், பழனிமுத்து வீட்டின் கதவு மற்றும் வீடுகளை சேதப்படுத்தியது மலை வாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்ததின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியியல் ஈடுப்பட்டு வருகின்றனர். ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் Forestபிரபாகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை குழுக்களாக கண்காணித்தும் ஊருக்குள் வரமால் இருக்க பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.