பொள்ளாச்சி: பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில், சிறு, குறு தொழில் செய்ய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு 4 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து கொண்டிருக்கிறது. அதில், குறிப்பாக சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ்களை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விரைவாக வழங்க வேண்டும் என பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் கோரிக்கை வைத்தது. இதில், எக்கனாமிக் சேம்பரின் சிஇஓ சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தொடர் போராட்டங்கள்: வேளாண் சட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழ்நாட்டு விவசாயிகள்!