கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்ததால், தன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
மிக வேகமாக மோதியதில் இரு சக்கர வாகன ஓட்டி மகேந்திரன்(19) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மகேந்திரனின் நண்பர் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுட்டார்.
இதற்கிடையில் கார் ஓட்டுனர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் சரணடைந்தை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனார்.