ETV Bharat / state

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல் - பயணிகள் அவதி - bus drivers protest

கோவை: பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட டைமிங் விவகாரத்தால், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல்
author img

By

Published : Aug 25, 2019, 5:34 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், கோவைக்கு செல்கின்றன.

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல்.

இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் அடிக்கடி டைமிங் விவகாரம் நிலவி வரும் சூழலில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று காலை 11:15 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்தை முந்திக்கொண்டு, அரசு பேருந்து ஒன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே வழிமறித்து நின்றது.

மேலும், தனியார் பேருந்துக்கு வழி விடாமல் பயணிகளை ஏற்றியதால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 20க்கும் மேற்பட்டோர், அரசு பேருந்து முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் எங்களுக்கு டைமிங் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் பேருந்துகளை அதிவேகமாக இயக்க நேரிடுகிறது என்றனர்.

Intro:busBody:busConclusion:பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட டைமிங் விவகாரத்தால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல். பயணிகள் அவதி.

பொள்ளாச்சி - ஆக- 25

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையைத்தில் 50ற்கும் மேற்பட்ட பேருந்துகள் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி பயணிகளை ஏற்றி செல்கிறது. இந்த பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே அடிக்கடி டைமிங் விவகாரம் நிலவி வரும் சூழலில் இன்று பொள்ளாச்சியில் இருந்து காலை 11.15 மணிக்கு கிளம்பவேண்டிய தனியார் பேருந்து ஒன்று தயார் நிலையில் இருந்த போது அந்த பேருந்திற்கு முன்பு திடீரென கோவை செல்லும் அரசு பேருந்து ஒன்று நிர்ணயிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து வழிமறித்து நின்றுகொண்டு தனியார் பேருந்திற்கு வழி விடாமல் நின்று பயணிகளை ஏற்றியத்தை கண்டு ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 20துக்கும் மேற்பட்டோர் திடீரென அரசு பேருந்து முன்பு அமர்ந்து பேருந்தை வெளியே விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுத்தியளித்ததான் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேல் ஏற்பட்ட இந்த மறியலால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் எங்களுக்கு டைமிங் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் நாங்கள் பேருந்துகளை அதிவேகமாக செலுத்த நேறிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.