பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை, அப்பர் ஆழியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அருகில் உள்ள ஆழியாறு அணையின் முழுக் கொள்ளளவான 120 அடி எட்டியுள்ளது.
தொடர்ந்து அணையின் பாதுகாப்பு நலன்கருதி ஒன்பது மதகுகள் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அணைக்கு ஆயிரத்து 291 கனஅடி நீர்வரத்து வந்துள்ளது. மேலும் இரண்டாயிரத்து 541 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்வரத்து தற்போது 119.55 அடியை எட்டியதால் மீண்டும் இரண்டாவது முறையாக ஆழியாறு அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளது.
இதனால் ஆழியாறு அணையிலிருந்து ஒன்பது மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!