கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (67). இவர் அதே பகுதியில் தோட்டம் வாங்கி ரிசார்ட் நடத்தி வருகிறார். வயது மூப்பின் காரணமாக முத்து 2017ஆம் ஆண்டு ரிசார்டை விற்க முயற்சி செய்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
அதில் ரூபாய் 3 கோடியே 36 லட்சத்தை சிங்காநல்லூர் கிளை வங்கியில் போட்டிருந்த பணத்தில், ஒரு கோடியே 35 லட்சத்தை செப்டம்பர் 2ஆம் தேதி முத்து ரிசார்ட்டிற்கு ஒரு வருட காலமாக வந்துபோகும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுப்புக்குமார் அவரது கார் ஓட்டுநர் சதீஷ் என்பவருடன் சென்று எடுத்துள்ளார்.
அப்போது முத்துவிடம் அனுபுக்குமார் இரவு நேரமாகிவிட்டதால் உங்களுடைய ஒரு கோடியே 35 லட்சம் பணத்தை காலையில் கொண்டுவந்து கொடுப்பதாக கூறிவிட்டு முத்துவை ரிசார்ட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் வராததால் அனுப்புக்குமார், சதீஷ் ஆகியோர் மீது ஆனைமலை காவல் துறையினரிடம் முத்து புகார் செய்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்து கொண்ட காவல் துறையினர் தற்போது அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரிசார்ட் உரிமையாளரிடம் பண மோசடி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு - ரிசார்ட் உரிமையாளரிடம் மோசடி
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரிடம் பண மோசடி செய்த இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
![ரிசார்ட் உரிமையாளரிடம் பண மோசடி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு ஆனைமலை காவல்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-cbe-01-pollachi-annamalai-police-fir-vis-tn10008-0509newsroom-1599318220-426.jpg?imwidth=3840)