கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.என்.சி நிறுவனத்தில், கோவையை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில் கடந்த 11 மாதங்களாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகவும், அதே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் டிராவல்ஸில் ஓட்டுநராக பணி புரிந்து வந்த அப்துல் ஹமீது(26) என்பவர் திருமணம் ஆனதை மறைத்து, காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளதாகவும், தன்னை பல முறை வெளியே அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடமிருந்து பல முறை பணம் வாங்கியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அப்துல் ஹமீது பிடித்து விசாரணை நடத்தினர். அவர் காதலிப்பதாக கூறி பழகி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!