ETV Bharat / state

பர்சை திருடி பர்சேஸ் செய்த அக்கா தங்கை; தொடர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம் - ஏடிஎம்

மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளையடித்து வந்த அக்கா தங்கையை கோவை போலீசார் கைது செய்தனர்.

பர்சை திருடி பர்சேஸ் செய்த அக்கா தங்கை; தொடர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

author img

By

Published : Jan 29, 2023, 11:10 PM IST

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் சிங்காநல்லூரில் இருந்து பாப்பநாயக்கன்பாளையத்திற்க்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ ஒன்றில் பயணத்திருக்கின்றார்.

அப்போது அப்ப பெண் ஆட்டோவிற்கு பணம் கொடுக்க தனது ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்த பொழுது அதில் இருந்த பர்ஸ் மாயமானது தெரிய வந்தது. அதில் 300 ரூபாய் ரொக்க பணமும் இரண்டு ஏடிஎம் கார்டுகளும் வைத்திருந்துள்ளார். ஏடிஎம் கார்டில் அதற்கான பின் (PIN) நம்பரையும் அப்பெண் எழுதி வைத்திருக்கின்றார்.

சிறிது நேரத்தில் ஏடிஎம் ஒன்றிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததற்கான மெசேஜ் அப்பெண்ணின் அலைபேசி நம்பருக்கு வந்திருக்கின்றன. இதனையடுத்து அப்பெண் உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கோவை மாநகர் பகுதியில் ஒரு துணிக்கடை ஒன்றில் திருடப்பட்டிருந்த ஏடிஎம் கார்டில் 28 ஆயிரம் ரூபாய் ஸ்வைப் செய்ததாக பட்டதாரி பெண்ணுக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்திருக்கின்றன.

அந்த ட்ரான்சேக்சன் ஐடியை வைத்துக்கொண்டு அங்கு சென்று போலீசார் விசாரித்த பொழுது இரண்டு பெண்கள் வந்ததாகவும் அவர்கள் துணியை வாங்கி விட்டு ஆட்டோவில் துணிகளை ஏற்றிக்கொண்டு சென்று விட்டதாகவும் துணி கடையின் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் முகாமிட்ட பந்தைய சாலை போலீசார் மாற்று உடையில் இருந்த பெண் போலீசாரிடமும் தகவல் தெரிவித்து சந்தேகத்துக்கிடமான இரண்டு பெண்களை தேடி வந்திருக்கின்றனர். அப்போது ஒரு நகைக்கடையில் இருந்து 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்கியதற்கான மெசேஜ் ஒன்று மீண்டும் அந்த பட்டதாரி பெண் அலைபேசி நம்பருக்கு வந்திருக்கின்றது.

உடனடியாக ஐடியை டிரேஸ் செய்து அந்த கடையின் போன் நம்பருக்கு அழைத்து போலீசார் பேசியிருக்கின்றனர். அங்கு வந்த பெண்கள் ஏடிஎம் கார்டு திருடி பொருட்களை வாங்கி இருப்பதாகவும் அவர்களை பிடித்து வைக்கும் படியும் தெரிவித்து இருக்கின்றனர். உடனடியாக கடையின் உரிமையாளர் பெண்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் பர்சை திருடி பர்சேசிங்கில் ஈடுபட்ட பெண்களை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்த பொழுது பெண்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் தந்திருக்கின்றனர். பிறகு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாரி என்கிற பெண் காளியம்மாள் மற்றும் லட்சுமி என்ற பெயருடன் உலா வருகின்றார். சித்ரா என்கிற பெண் செல்வி என்ற பெயரில் உலா வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தைப்பேட்டை தெருவை பூர்வீகமாகக் கொண்ட அக்கா தங்கை என தெரியவந்துள்ளது. பகவதி என்ற ஒருவரையே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருப்பதும் கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்தவர்கள் சமீபகாலமாக பிட் பாக்கெட், நூதன கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்தது.

சொந்த ஊரிலிருந்து பேருந்துகளில் தமிழ்நாடு முழுவதும் தேனி, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து பயணிப்பது வழக்கமாக கொண்டு, பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலிலோ அல்லது பேருந்து பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் உடமைகளை திருடி சென்று பணம் பொருள் ஈட்டிருக்கின்றனர்.

போலீசாரின் விசாரணையில் இவர்கள் மீது பெரம்பலூர், தேனி, சென்னை போன்ற இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நடந்து வருவதும் தெரிய வந்தது. பந்தய சாலை போலீசார் இந்த இரண்டு பெண்களிடம் இருந்தும் பர்ஸ் இரண்டு ஏடிஎம் கார்டுகள் 84 ஆயிரத்து 450 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைதான இரண்டு பெண்களையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி சாதனைப் படைத்த 'குமரி ஸ்ட்ராங் மேன்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.