கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ். புரம், லாலி ரோடு, பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் ஏப்.25ஆம் தேதி பூட்டை உடைத்து 10 லட்சத்து 72 ஆயிரத்து 279 ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக டாஸ்மாக் உரிமையாளர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். மேலும் திருடர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் ஆசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் கொள்ளை அடித்த சீரநாயக்கன்பாளையம் எம். ஜி. ஆர். வீதியைச் சேர்ந்த குமார் என்ற சதீஷ்குமார் (29) என்பவரை ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.