கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களது மனுக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவார்கள். அந்த வகையில், கடந்த வாரம் திங்கட்கிழமை பாமகவின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அவர் ஒரு தன்னார்வ அமைப்பினருடன் சென்று கனிம வளக்கொள்ளை குறித்து மனு அளித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின்போது அமர்ந்து கொண்டே மனுவை வாங்கியதாகவும், மனு அளிக்க வந்த பொதுமக்கள் நின்று கொண்டே மனு அளிப்பதாகவும் கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர், தன்னை மேலானவர் என்றும், மக்கள் தாழ்வானவர்கள் போலவும் கருதுவதாகவும் குற்றம் சாட்டிய அசோக் ஸ்ரீநிதி, அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்தும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். அப்படத்தின் மையக்கருத்தை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அசோக் ஸ்ரீநிதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
.@kranthi_tweet நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
— Ashok Srinithi (@AshokSrinithi) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும்.
2. பின்பு ரசீதை pic.twitter.com/VDGYo5NUJ0
">.@kranthi_tweet நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
— Ashok Srinithi (@AshokSrinithi) July 18, 2023
1. குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும்.
2. பின்பு ரசீதை pic.twitter.com/VDGYo5NUJ0.@kranthi_tweet நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
— Ashok Srinithi (@AshokSrinithi) July 18, 2023
1. குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும்.
2. பின்பு ரசீதை pic.twitter.com/VDGYo5NUJ0
அந்த ட்விட்டர் பதிவில், "நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கான டிக்கெட்டை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். படத்தின் மையக் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணிக் கணக்கில் நின்று ரசீது பெற வேண்டும். பின்பு ரசீதை வைத்துக் கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள், நாங்கள் உங்கள் முன் நின்று பேச வேண்டும். உங்களை நாங்கள் அன்னார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டு இருக்கும்.
உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும், உங்களை விட நாங்கள்(மக்கள்) தாழ்வானார் போலவும் இருக்கும். நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும்? - நீங்கள் வெறும் அரசு ஊழியர்தான், மக்கள் பிரச்சனையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும் மக்களை ஏன் நிற்க வைக்க வேண்டும்? - உங்களின் முன்பு நாங்கள் உட்காரக் கூடாதா? - உடனடியாக இதை சரி செய்யவும், இல்லை என்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன்தான் வருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தயவு செய்து நடவடிக்கை எடுங்கள், மக்களை தவறாக நடத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டு, இந்த பதிவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதி பேச வேண்டிய அமைச்சர் மது நீதி பேசுகிறார்..! அன்புமணி ராமதாஸ் கண்டனம்