கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அருண் என்பவருக்குச் சொந்தமான ஜூக்கா பீட்சா (Zucca pizza) கடை இயங்கி வந்தது. கோயம்புத்தூர் மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பீட்சா கடைக்குப் பின்புறத்தில் உணவு பொருள்களை அடுக்கி வைக்கும் இடத்தில் பூனை ஒன்று இறந்து கிடந்தது. இதைக் கண்ட பக்கத்து கடைக்காரர்கள், இதுகுறித்து பீட்சா கடை ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதை அலட்சியப்படுத்திய ஊழியர்கள், பின்புறக் கதவை பூட்டியுள்ளனர். கடந்த இரு தினங்களாக உள்ளேயே பூனை இருந்த நிலையில், துர்நாற்றம் வீசி, புழுக்கள் வர தொடங்கின.
இது குறித்து பக்கத்து கடைக்காரர்கள், மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இறந்துபோன பூனையை அப்புறப்படுத்தி பீட்சா கடைக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்குச் சீல்: ஆணையாளர் அதிரடி!