கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமாக வெண்பன்றி வளர்ப்பு கூடம் உள்ளது. இதில் வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விடுவது வழக்கம், இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை, இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன், வேடியப்பன்,அவரது உறவினர் வேடியப்பன் ஆகிய மூன்று பேர் இன்று வரவழைக்கப்பட்டனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் ராஜப்பன் உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே இறங்கியதும் ராஜப்பன் மயக்கமடைந்தார் அவரை காப்பாற்ற வேடியப்பன் இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்து உயிரிழந்தனர்.
இது குறித்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் பதிவு செய்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.