ETV Bharat / state

Coimbatore GH: மழைநீரால் தீவு போல் காட்சியளிக்கும் கோவை அரசு மருத்துவமனை! - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் மழை நீர் வெளியேர வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

Patients and public are suffering due to stagnant rain water in the premises of Coimbatore Government Hospital
தேங்கிய மழை நீரால் தீவு போல் காட்சியளிக்கும் கோவை தலைமை அரசு மருத்துவமனை
author img

By

Published : May 3, 2023, 10:27 AM IST

தேங்கிய மழை நீரால் தீவு போல் காட்சியளிக்கும் கோவை தலைமை அரசு மருத்துவமனை

கோயம்புத்தூர்: கோவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலை நேரங்களில் கடும் வெயிலும், மாலையில் கனமழையும் பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், புறநோயாளிகள் வந்துச் செல்கின்றனர். அரசு மருத்துவமனை முன் இரண்டு நுழைவாயில்கள் உள்ளது. இதில் ஒரு நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும். மேலும் அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவாயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாததை போன்று தீவு போல் மாறிவிடுகிறது. இதனால் ஆம்புலன்ஸ்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு மற்றொரு வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியில் வருகிறது. அதே சமயம் அந்த ஒரு நுழைவாயிலையே பொதுமக்களும் பயன்படுத்துவதால் அங்கு நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. தேங்கிய மழை நீரை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இயந்திரங்களை கொண்டு அகற்றிய பிறகுதான் இந்த வழியை மீண்டும் பயன்படுத்த முடிகிறது. எனவே இந்த நுழைவாயிலின் உள்ளே மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றும் கருவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.