ETV Bharat / state

கோவையில் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' விண்ணப்பம் - சிறப்பு முகாம்கள் ஏற்பாடு! - Artist Womens Rights Scheme

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

artist womens rights scheme
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
author img

By

Published : Jul 19, 2023, 3:56 PM IST

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 823 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும்; மொத்தம் 1401 நியாய விலைக் கடைகள் உள்ளதாகவும் மக்கள் கூட்டம் இல்லாமல் விண்ணப்பம் பெறுவதற்காக 2 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்றார். முதல்கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றார்.

மேலும், ''நாளை முதல் குடும்பத்தலைவிகள் சிறப்பு முகாம்களுக்கு வருவதற்கான தேதி மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். முதல் இரண்டு நாட்களுக்கு 60 பேர் வீதமும், பின்னர் நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதமும் விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள் மொபைல் செயலி மூலம் சேகரிக்கப்படும். மக்கள் யாரும் அவசரப்பட வேண்டாம். விண்ணப்பங்களை மக்கள் பூர்த்தி செய்து வர வேண்டும்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு உதவ முகாமில் ஏற்பாடு செய்யப்படும். இம்முகாமிற்கு வரும்போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரம், மின் கட்டண அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்டு வர வேண்டும். ஆன்லைன் மூலம் சரிபார்ப்புகள் நடைபெறும்.

இம்முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கூடுதல் நாட்களும் வழங்கப்படும். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உதவியுடன் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்து தனியாகப் பதிவு செய்யப்பட்டு, இல்லாத ஆவணங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அனைவரது விவரங்களையும் வாங்கிய பிறகு தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இது அரசின் திட்டம். இதில் தகுதியானவர்கள் விடுபடாமல் இருக்க ஏற்பாடு செய்யப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆவின் அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவலுக்குப் பிறகு ஆட்கள் பற்றாக்குறையால் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டது. அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் - வேளாண் இணை இயக்குநர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.