கோயம்புத்தூர் மாவட்டம் எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி விமலாதேவி. இவர்களது மகன் வைதீஸ்வரன். இவர், 12ஆம் வகுப்பு படித்த வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் கிணத்துக்கடவு அருகேவுள்ள கோவில்பாளையத்தில் தனது உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இதையடுத்து, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வைத்தீஸ்வரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றொர் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு , அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இது குறித்து அவரது தந்தை கூறுகையில், மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான்.
எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும், ஆன்மீக பணிகளிலும் அவர் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் அவரது உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பியிருந்தாக கண்ணீர் மல்க கூறினார்.
இதையும் படிங்க: நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு: பவானிசாகர் எம்எல்ஏ நிதியுதவி!