கோவை மாவட்டம், பொள்ளாச்சி டவுன் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் வால்பாறையைச் சேர்ந்த சுரேஷ்(30) என்பதும், மனைவி, குழந்தையை பிரிந்த நிலையில், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது சடலமாக கிடந்த அவரை யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.