கோவை: வனக்கோட்டம், கெம்பனூர் சுற்று அட்டுக்கல் சராக போலாம்பட்டி பிளாக் III காப்பு வனப்பகுதியில் நேற்று மாலை வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிறந்து சுமார் 1 மாதமே ஆன ஆண் யானைக்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது. இது குறித்து வனத்துறைனர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். கோவை வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று தணிக்கை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இன்று (ஜூலை 22) யானைக்குட்டியின் உடலானது சத்தியமங்கலம் வனக் கால்நடை உதவி மருத்துவர்களால் உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது. கோவை வனச்சரகத்தில் தொடந்து யானைகள் உயிரிழப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் கடன் - ரயில்வே துறை அமைச்சர்