ETV Bharat / state

உணவின்றி சாலையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தவர்கள்: உதவுமா அரசு? - ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் வடமாநிலத்தவர்கள்

கோவை: ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் வடமாநிலத்தவர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தனர்.

உணவின்றி சாலையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தவர்கள்

author img

By

Published : Mar 28, 2020, 2:54 PM IST

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து அனைத்தும் ரத்தானது. இதனால் பல்வேறு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை போத்தனூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் கட்டட தொழில் செய்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் வேலை செய்யும் இடத்திலேயே இருந்துவருகின்றனர்.

உணவின்றி அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த வடமாநிலத்தவர்கள்

மேலும், அவர்கள் தங்களிடம் இருந்த சில உணவுப் பொருட்களை வைத்து இதுவரை சமைத்து வந்தனர்.

இந்நிலையில், உணவுப் பொருட்களும் தீர்ந்ததால், உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல், சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர்.

அதன் பின் அங்கு வந்த காவல் துறையினர், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து வழங்கினர். தற்போது அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனிமைப்படுத்தலின்போது உண்ண வேண்டிய சமச்சீர் உணவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.