கோவை: கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தற்போது தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அவர் தொடர்ந்து, மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்.
இந்நிலையில் கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட சுக்ரவார்பேட்டை பகுதியில் உள்ள மார்வாடி, போஜ்புரி, ராஜ்கூத் போன்ற ஊர்களைச் சேர்ந்த வட மாநிலப் பெண்கள் வானதி சீனிவாசனை ஆதரித்தும் அமைச்சர் வேலுமணியை ஆதரித்தும் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது, முழக்கங்களை எழுப்பிய அவர்கள், 'வானதி அக்கா ஜிந்தாபாத், சப்போர்ட் ஃபார் வேலுமணி' என்றும் முழக்கங்களையும் எழுப்பினர்.