ETV Bharat / state

'எத்தனை கருணாநிதி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - எஸ்.பி.வேலுமணி - அமைச்சர் வேலுமணி கோவை வருகை

கோயம்புத்தூர்: எத்தனை கருணாநிதி, ஸ்டாலின் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

admk
admk
author img

By

Published : Oct 18, 2020, 7:00 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் நீலாபூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 106 அடி உயரம் கொண்ட அதிமுக கொடி கம்பத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக கொடியேற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆட்சியை யார் நினைத்தாலும் அசைக்க முடியாது. ஸ்டாலின் உட்பட பலரும் இந்த ஆட்சியில் குழப்பம் ஏற்படும், சிந்துபாடி விடலாம் என்று எண்ணினார்கள். ஆனால் அது எதுவும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி மக்களின் ஒருவராக முதலமைச்சரானார்.

ஸ்டாலினை போன்று வாரிசு அரசியலில் வரவில்லை. ஸ்டாலின் என்றாலே எதிலும் பொய், அனைத்திலும் குற்றம் என்று இருப்பவர். எடப்பாடி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பவர். கோவையிலேயே அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் வந்துவிட்டன. திமுகவில் எந்த எம்எல்ஏ, எம்.பியும் மக்களை நேரடியாக சந்திக்கமாட்டார்கள்.

அதிமுகவை அசைக்க முடியாது
அதிமுகவை அசைக்க முடியாது

ஆனால், அதிமுகவில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மக்களை நேரடியாக வந்து சந்திப்பர். எத்தனை கருணாநிதிக்கள், ஸ்டாலின் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: “40 வருஷமா இருக்கோம், எதுவும் மாறலை” - கழிவு நீரால் பாதிக்கப்படும் சாலையோர மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.