கோவை - குனியமுத்தூர் பகுதியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில், முகமது கனி, அப்ரீனா ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டிக்கும் வகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமணத் தம்பதி, அவரது உறவினர்கள் 'நோ சி.ஏ.ஏ' என்ற பதாகைகளை ஏந்தியவாறு மேடையில் நின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, பல இடங்களில் பல்வேறு மக்கள் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருமண விழாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, புதுமணத் தம்பதியினர், அவரது உறவினர்கள் புதுவிதமான வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆம்பூரில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு!