ETV Bharat / state

பில்லூர் அணை திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகளிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

பில்லூர் அணை திறப்பு
பில்லூர் அணை திறப்பு
author img

By

Published : Oct 13, 2021, 6:53 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்து பில்லூர் அணை அமைந்துள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி, கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.

பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக கனமழை பெய்துவருகிறது. திங்கள் கிழமை பில்லூர் அணைக்கு விநாடிக்கு 2,200 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 86 அடியிலிருந்து 91 அடியாக உயர்ந்தது.

அணையில் மின் உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் வெளியேறியது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று (அக். 12) காலை அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

அணையின் நீர்மட்ட உயரம் 91 அடியிலிருந்து 97 அடியாக உயர்ந்தது. மீண்டும் மின் உற்பத்திக்காக இரண்டு எந்திரங்களை இயக்கியதில் அணையிலிருந்து விநாடிக்கு ஆறாயிரம் கனஅடி நீர் வெளியேறியது. தொடர் மழை காரணமாக அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் நான்கு மதகுகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.