ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்
author img

By

Published : Oct 20, 2021, 3:30 PM IST

கோவை: பார்க் வீதி பகுதியில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், 'நாட்டில் பாஜக அரசின் கல்வித் தாக்குதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு காரணமாக இதுவரையில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்ட மசோதாவினை இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்திலேயே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. தற்போதும் ஆளுநர் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் கையெழுத்திடாமல் இருப்பதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

ஆளுநர் மாளிகை முற்றுகை

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு உடைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு, அக். 27ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்தில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிய அரசு, தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த கல்வித்துறையிலும் மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைக்கப்பட வேண்டும் என்பதற்கு மாறாக, வினாடி-வினா என்ற தேசியக் கொள்கையையும் அனுமதிக்க இயலாது.

தனிக் கல்விக்கொள்கை

நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும். அரசு கல்லூரிகள் பல தொடங்கப்பட்டாலும்; அதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட 10 கல்லூரிகளில் தற்போது வரை, ஒரு துறைக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

தமிழ்நாட்டில் 35 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. குறிப்பாக, 153 அரசு கல்லூரிகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளனர்.

மேலும், தேசிய கல்விக் கொள்கையை வேறு பெயரில் செயல்படுத்த முயல்வதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது' என்று தெரிவித்தார்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: என்எஸ்ஜி வீரர்கள் இன்று சென்னை வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.