இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' மேட்டுப்பாளையத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு அந்த சுவர் சிமெண்ட் போடாதது காரணம் என்று கூறினார். இது பற்றி கடந்த 1998ஆம் ஆண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது அரசின் அலட்சியம். 2018ஆம் ஆண்டு அக்டோபரில் 60 பேரிடம் கையெழுத்து வாங்கி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோதே, நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது.
இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்டுப் போராடியவர்களைத் தாக்கி இருப்பது கண்டனத்திற்கு உரியது. தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் உடலை உறவினர்களுக்குத் தராமல் எரிப்பது சர்வாதிகார ஆட்சியில்தான் நடக்கும். இதற்கு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மட்டும் காரணமல்ல. நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும்தான் காரணம்.
தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பது தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இது உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதை தடுக்கும் செயலாக இருக்கிறது. தேர்தல் ஆணையர் பழனிசாமி, முதலமைச்சர் பழனிசாமி ஆணைக்கிணங்க செயல்படுகிறார். உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக திமுக தொடுத்த வழக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க:
'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ