கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கிழக்கு சம்மந்தம் சாலை சீரமைப்பு பணிக்காக ஜல்லி, மண் கொட்டப்பட்டுள்ளன. இவை சாலையின் ஓரமாக கொட்டப்படாமல் குறுக்கே கொட்டப்பட்டுள்ளன.
இதனால், அச்சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் அவசர சிகிச்சைகாக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை உறவினர்கள் தூக்கிச் சென்று அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில நோயாளிகள் தூக்க கூடிய நிலையில் இல்லாததால் ஸ்ரெட்ச்சர் மூலம் வெயிலில் தூக்கிச் செல்கின்றனர்.
சாலை பணிகளுக்காக ஜல்லி, மண் கொட்டுவது பிரச்னை அல்ல, அவற்றை ஓரமாக கொட்டாமல் சாலையின் குறுக்கே கொட்டப்பட்டதால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சாலையின் குறுக்கே கொட்டப்பட்டுள்ள ஜல்லி, மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையேர மரக்கன்று பரமாரிப்பு வழக்கு; நெடுஞ்சாலைத்துறை செயலர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு