ETV Bharat / state

பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத குரங்கு அருவி - சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

கோயம்புத்தூர் : பொள்ளாச்சி குரங்கு அருவியில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

தடுப்புகள் இல்லாத குரங்குநீர்வீழ்ச்சி
author img

By

Published : Aug 21, 2019, 6:29 PM IST

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். பின்பு 14 நாட்களுக்குப் பிறகு பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத குரங்குநீர்வீழ்ச்சி.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் செலவில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த தடுப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் குளிக்க பாதுகாப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து, வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதின் காரணமாக மழை வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. ரூபாய் 10 லட்சம் செலவில் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைத்திட கூறி, அரசுக்கு தெரிவித்துள்ளோம், விரைவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Intro:fallsBody:fallsConclusion:பொள்ளாச்சி அருகே குரங்கு நீர் 14 நாட்கள் பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதி , பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அச்சம். பொள்ளாச்சி- 21 பொள்ளாச்சி அருகே உள்ளகுரங்குநீர்வீழ்ச்சியில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர், கடந்த 14 நாட்கள் பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 25 வருடங்கள் பிறகு கடந்த சில மாதங்கள் முன்பு ரூ 5 லட்சம் செலவில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டதின்காரணமாக தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டது இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு இல்லாததால் அச்சத்துடன் உள்ளனர். வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதின் காரணமாக மழை வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. ரூ10 லட்சம் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசுக்கு தெரிவித்துள்ளோம், விரைவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.