கோவை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், மோனிஷா. சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியத்தில் புதுமை படைக்க, உண்ணும் முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் பருவத்தின் போது முட்டையின் ஓட்டில், மகாத்மா காந்தியின் ஓவியம் வரைந்துள்ளார். அது அருமையாக வரவே அவரது தாய், தந்தை அளித்த ஊக்கத்தில் 1 மணி நேரம் 30 நிமிடங்களில் 50 முட்டைகளில் 50 இந்திய தலைவர்களின் முகங்களை வரைந்து தேசிய விருது பெற்றுள்ளார்.
இவரின் அடுத்த இலக்கு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே. அதற்கான முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதில் இவர் சிறு வயதில் இருந்தே எந்தவொரு ஓவியப் பயிற்சி மையம் செல்லாமலும், ஆசிரியர்கள் சொல்லித் தராமலும் தனது ஆர்வத்தின் மூலம் சொந்த முயற்சியில் தாமாக ஓவியம் கற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தலைவர்களின் முகங்களைத் தவிர இயற்கைக் காட்சிகள், விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை வரைய தன்னைத் தயார் படுத்திக் கொண்டுள்ளார். அதை வைத்து கின்னஸ் சாதனை படைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இவர் ஓவியம் மட்டுமின்றி நடனம், மாரத்தான் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?