கோவை காந்திபுரம் பகுதியில் மூடப்பட்ட செல்போன் கடைகள் - கோவை மாவட்ட செய்திகள்
கோவை : மாநகராட்சி உத்தரவின் பேரில் காந்திபுரம் கிராஸ் கட் பகுதியில் இயங்கும் 200க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் மூடப்பட்டன.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிராஸ் கட் சாலையில் செல்போன் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவியது.
இதனால் கிராஸ் கட் சாலையின் 10 தெருக்களில் உள்ள செல்போன் கடைகள், செல்போன் சர்வீஸ் கடைகள், உதிரிபாக கடைகள் அனைத்தையும் மூட கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு கிராஸ் கட் சாலையில் உள்ள 10 தெருக்களிலும் செல்போன் கடைகள் மூடப்படும்.

எனவே, ஐந்து நாட்களுக்கு செல்போன் கடைகள் எதுவும் கிராஸ் கட் சாலையில் செயல்படாது. உத்தரவை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.