வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா தலைமையில் கபசுரக் குடிநீரும், நலிந்தோருக்கு கூட்டுறவு வங்கி மூலமாகக் கடனுதவியும் வழங்கப்பட்டன.
மேலும் வால்பாறை பகுதியில் நகராட்சி ஆணையர் தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் நகராட்சி செலவில் ஜேசிபி இயந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது. இதில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதனையடுத்து சோலையாறு எஸ்டேட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முடீஸ், வாகமலை, பன்னிமேடு, உருளிக்கல், சேக்கல், முடி வில்லோணி போன்ற பகுதிகளில் சுமார் எட்டாயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள், நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், மாவட்ட பாசறை செயலாளர் சலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்த 50 தமிழர்கள் மீட்பு!