ETV Bharat / state

நான் தயார், ஸ்டாலின் தயாரா? - வேலுமணி பதிலடி - ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதன் ஒத்திகை நிகழ்ச்சி

கோயம்புத்தூர்: என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு செல்வதற்கு நான் இப்பொழுதே தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா? நான் ஆண்மையுடன் சவால்விடுகிறேன். ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் என் சவாலை ஏற்கட்டும் என அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

minister velumani
minister velumani
author img

By

Published : Jan 2, 2021, 6:28 PM IST

Updated : Jan 2, 2021, 6:45 PM IST

கோயம்புத்தூர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு 47 ஆயிரத்து 200 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரத்து 200 செவிலியருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆறு லட்சம் பேரை கண்டறிந்து தடுப்பூசி போடப்படும்.

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன கிடங்குகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு மட்டுமே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

அமைச்சர் வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து, அமைச்சர் வேலுமணி பேசுகையில், "எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாத அவதூறு சாட்டுகள் ஆகும். என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு செல்வதற்கு நான் இப்பொழுதே தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா?

நான் இப்பொழுதே தயாராக இருக்கிறேன்

நான் ஆண்மையுடன் சவால்விடுகிறேன். ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் என் சவாலை ஏற்கட்டும். என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கட்டும். மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியதை ஏற்க முடியாது. இதை அதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்தப் பெண்ணை தாக்கியதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நான் ரெடி நீங்க ரெடியா? - அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் பதிலடி

Last Updated : Jan 2, 2021, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.