கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கிவைத்தார். பின்னர் உக்கடம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட உள்ள குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்கடம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.49.40 கோடி மதிப்பில் 520 அடுக்குமாடி குடியிருப்பு வர போகிறது.
கோவையில் மொத்தம் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அம்மா அரசை பொறுத்தவரை சாதி மதங்களை கடந்து அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலியோ நோயை அறவே ஒழிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 1589 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது" என்றார்.