கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அரசு மேனிலைப்பள்ளியில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி பேசுகையில், 'வால்பாறைப் பகுதியில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்,
தொழில் வரி, சாலை வசதி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா போன்ற பொதுமக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும்; கோயம்புத்தூர் மாவட்டம் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை நேரடியாக இங்கு அனுப்பியுள்ளார்' என்றார்.
இந்த நிகழ்வின்போது செந்தில் பாலாஜி மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
இதில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரான், மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், ஆனைமலைப் புலிகள் காப்பக துணை கள இயக்குநர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பட்டா வழங்கி குடியமர்த்துக - பழங்குடியின மலைவாழ் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்