ETV Bharat / state

கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை - Minister Senthil Balaji is confident DMK alliance will win 100 percent in urban local body election Coimbatore district

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி 100 விழுக்காடு வெற்றியைப் பெறும் எனவும்; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த வெற்றியைத் தரப் பொதுமக்கள் தயாராக உள்ளனர் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்

author img

By

Published : Feb 7, 2022, 3:58 PM IST

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் கோயம்புத்தூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இருகூர் பகுதியில் இன்று காலை பரப்புரையைத் தொடங்கிய அவர், சூலூர், சோமனூர் உள்ளிட்டப் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். சோமனூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யவும், உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளவும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

  • கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022ல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சோமனூர் பேருந்து நிலையம் அருகே கழகத்தின் முத்தான சாதனைகளை மக்களிடத்தில் (1/2) pic.twitter.com/Q9hWgTKRrz

    — V.Senthilbalaji (@V_Senthilbalaji) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்களின் தேவையை அறிந்து முதலமைச்சர் செயல்படுகிறார். உள்ளாட்சியில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் மகத்தான வெற்றியைப்பெறுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் முதலில் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைச்சர் செந்தில் பாலாஜி பரப்புரை

கோவை மாவட்டத்தில் 300 இடங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.

எட்டு மாதத்தில் செய்த சாதனைகளையும் வரக்கூடிய காலங்களில் அரசு செய்ய வேண்டிய பணிகளையும் குறித்தும் உரையாற்றியுள்ளார். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் 7 நகராட்சிகள் என 811 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சியோடு 811 வேட்பாளர்களும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.

தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100% திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த வெற்றியைத் தரப் பொதுமக்கள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து அமைச்சர் பெருமக்கள், அலுவலர்கள் பேசியுள்ளனர்.

தொடர்ந்து போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து அலுவலர்கள் எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தலில் நின்றால் ஈனம் மானம் பார்க்கக் கூடாது - உடன்பிறப்புகளுக்கு அமைச்சர் அறிவுரை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.