கோவை:உப்பிலிப்பாளையத்தில் உள்ள மேம்பாலம், அவிநாசி சாலையை இணைக்கும் முக்கியமான மேம்பாலமாக திகழ்ந்து வருகிறது. பொதுவாக கனமழை பொழியும் நாட்களில் மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி நிற்பது வழக்கம்.
மழை நீரில் சிக்கிய கார்
இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக அவிநாசி மேம்பாலத்திற்கு கீழே சென்ற கார் ஒன்று நீரில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூன்று பேர் தப்பினர்.இந்நிலையில், மேம்பாலத்திற்கு அடியில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி காரை வெளியே எடுக்கப்பட்டது. இதனால் மேம்பாலத்திற்கு அடியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:திருமலைக்குச் சென்றபோது கார் விபத்து: 5 பேர் கருகி பலி