ETV Bharat / state

“2026-இல் திமுக எனும் அரக்கனை பொதுமக்கள் அழித்துவிடுவர்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் - covai news

Union Minister L.Murugan: தமிழக அரசு, வளர்ச்சிக்கான பணிகளில் கவனம் செலுத்தாமல் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 10:58 AM IST

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர்
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, “தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 112 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 97 சதவீத பணிகள் நிறைவுற்று, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தார் சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் அமைக்கும் பணிகளும், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்: இந்த மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, இந்த மேம்பால கட்டுமானப் பணிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். இங்குள்ள மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேம்பாலப் பணிகள் முடிவு பெறும்.

திமுக எனும் அரக்கன்: தமிழக அரசு வளர்ச்சிக்கான பணிகளில் கவனம் செலுத்தாமல், தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. 2024 தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். 2026ஆம் ஆண்டு திமுக எனும் அரக்கனை பொதுமக்கள் முற்றிலுமாக அழித்து, மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுவார்கள். சென்னையில் மழை பாதிப்பு சீரமைப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசு கூறுகிறது.

செயலில் ஆர்வம் காட்ட வேண்டும்: ஆனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மிக மோசமாக உள்ளது. சென்னையைப் போலவே கோயம்புத்தூரிலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. வாய் சவுடால் பேசுவதை விட்டுவிட்டு, தமிழக அரசு செயலில் ஆர்வம் காட்ட வேண்டும்” என கூறினார்.

முன்னதாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வரும் வழியில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தேநீர் கடையில் பொதுமக்களோடு சேர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: 28 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய ஏரி... கோவை அக்ரஹார சாமக்குளம் விவசாயிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.