கோயம்புத்தூர்: கேரள மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வரும் பயணிகளிடம், கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க ஆட்சியர் சமீரான் உத்தரவிட்டார்.
உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தாபுரம் பகுதிகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் நபர்கள் மருத்துவச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் சளி மாதிரி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் 110 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா பரவல் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?