ETV Bharat / state

பூங்கா இடத்தில் குப்பைக் கிடங்கு; பொதுமக்கள் எதிர்ப்பு!

கோவை: திரு.வி.க நகரில் பூங்கா அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை
author img

By

Published : Jul 20, 2019, 6:08 PM IST

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திரு.வி.க நகரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

இதற்கு திரு.வி.க நகர் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கு அமைப்பதால் பல்வேறு தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது. "குப்பைக் கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனற்.

Intro:கோவை அருகே குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

Body:கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் திரு வி க நகர் அமைந்துள்ளது இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதனை ஒட்டியே பூங்காவிற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டுவந்து தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதற்கு திரு வி க நகர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அடிவாரத்தில் இயற்கை சூழலில் உள்ள தங்களுக்கு குப்பை கிடங்கு வந்தால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இங்கு கூடியிருக்கும் முடியாத சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர் மேலும் வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் யானைகள் காட்டுப் பன்றிகள் உள்ளிட்டவை தங்கள் பகுதிக்குள் நுழைந்து வரும் சூழலில் குப்பை கிடங்கால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் குப்பை கிடங்கை தேடிவரும் நிறுவனங்களால் மனித மிருகம் மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் குப்பை கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.