ETV Bharat / state

’கோடநாடு விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிடுக’ - கே.பாலகிருஷ்ணன் - k balakrishnan pressmeet

கோடநாடு விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மா.கம்யூ செயலாளர்
மா.கம்யூ செயலாளர்
author img

By

Published : Aug 19, 2021, 10:45 AM IST

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாள்களாக நடைபெற்றது. இதில், இரண்டாவது நாளான நேற்று (ஆக.18) பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: "மத்திய அரசு நாளுக்கு நாள் அனைத்து மக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் நிகழ்ச்சி

மோடி அரசின் குற்றப்பத்திரிகை தாக்கல் என்ற நிகழ்ச்சியினை, மாநிலம் முழுவதும் 1,000 மையங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம். அதில், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களுக்கு விளக்க இருக்கிறோம்.

அகில இந்திய அளவில் சிபிஎம் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செப்டம்பர் மாதம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.

திண்ணைப் பிரச்சாரம்

விவசாயிகள் பிரச்சனை பெகாசஸ் விவகாரம் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களுக்கு திண்ணைப் பிரச்சாரத்தில் விளக்கப்படும்.

தடுப்பூசி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மா.கம்யூ செயலாளர்
மா.கம்யூ செயலாளர்

தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என பல இடங்களில் பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக நீதியை பாஜக எதிர்க்கிறது

தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளால் பதற்றத்தை உருவாக்க பாஜக முயன்று வருகிறது. மத்திய அமைச்சர் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில் மதப் பதட்டத்தை உருவாக்கும் பாஜகவை கண்டிக்கிறோம். ”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கலாம்” என்ற முற்போக்கான நடவடிக்கைகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் சமூக நீதியை எதிர்த்து பாஜக இயங்குகிறது.

தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் முனைவோர் உடன் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

மேயரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர், மேயர் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

அன்னூர் ஒட்டர் பாளையம் வீடியோ விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவையற்ற சாதிய பதட்டத்திற்கு கோவை மக்கள் இடம் கொடுக்கக் கூடாது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கோடநாடு விவகாரத்தில் மறு விசாரணை வேண்டும்

கோடநாடு கொலை சம்பவத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு தகவல்களும் அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் வெளியானது. ஆனால் அதில் தொடர்பு இருப்பவர்களை வெளியில் விடாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் சிறையிலேயே அடைத்து வைத்து இருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கோடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகள் தற்போது சொல்லக் கூடிய தகவல்களின் அடிப்படையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சாதி அரசியலை கைவிட வேண்டும்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவரது சமூகத்தின் பெயரை சொல்லிச் சொல்லி பிரச்சாரம் செய்யும் சாதி அடிப்படையிலான அரசியலை கைவிட வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அல்ல.

பாதுகாப்புடன் அரசியல் செய்யும் கட்சியாக அதிமுக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. பெகாசிஸ் உளவு நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு 900 கோடி மத்திய அரசால் செலவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு மட்டும் தான் அச்செயலி தரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கின்ற நிலையில், அதற்கு அரசுதான் பொறுப்பு.

வியாபார ஏஜென்டாக மாறிய மோடி

நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அவ்வாறு குரல் எழுப்பும்போது ஆட்சியாளர்கள் தான் அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை உபயோகிக்கக் கூடாது என்று கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்வது போல் தான் உள்ளது. பிரதமர் மோடி நாட்டினுடைய பிரதமராக பணியாற்றுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார ஏஜென்டாகவே செயல்பட்டு வருகிறார் என்பதை நாங்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: 'சமூகநீதிக் காவலர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.