கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளத்தில் ஆண்சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை அவ்வழியே வந்த பொதுமக்கள் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அந்நபரின் பெயர் கேசவன்(47) என்பதும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உக்கடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று உக்கடம் வாலாங்குளத்தில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இன்று உக்கடம் பெரியகுளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது காவல்துறையினரிடையேயும் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.