ETV Bharat / state

சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால்... நாடு தழுவிய போராட்டம்.. லாரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை.. - கோயம்புத்தூர் செய்திகள்

சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசுத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய வேலைத் நிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை
சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால்...நாடு தழுவிய வேலைத் நிறுத்தப் போராட்டம்
author img

By

Published : Apr 1, 2023, 5:04 PM IST

கோவை: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல் (ஏப்ரல் 1) சுங்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், 29 சுங்கச் சாவடிகளில் முதல்கட்டமாக கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

கோவை மாவட்டம் கணியூர் சுங்க சாவடியில் இந்தப் புதியக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கணியூரில் உள்ள சுங்கச் சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் ஒருமுறை கடந்து செல்ல 110 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 115 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிறியரக பேருந்துகள் ஒருமுறை மட்டும் சுங்கச் சாவடியை கடக்க 170 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 180 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது.

கோவை
சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால்...நாடு தழுவிய வேலைத் நிறுத்தப் போராட்டம்

பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஒருமுறை மட்டும் செல்ல 345 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 365 ரூபாயாகவும்,
கட்டுமான மற்றும் இதர கனரக இயந்திர வாகனங்கள் (3-6 அச்சுகள்) 525 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 555 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல மிகப்பெரிய கனரக வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்க 685 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 720 ரூபாயாக அதிகரிக்கபட்டுள்ளது.

சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் பண செலவு ஏற்படுவதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை உயர்வு, நெருக்கடியை தரும் நிலையில் இந்தச் சுங்க கட்டண உயர்வு அதை கூடுதலாக்கி இருக்கின்றது என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இதனால் அத்தியாவாசிய பொருட்களின் விலையும் ஏறி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.

இதனிடையே கணியூர் சுங்கச் சாவடியில் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மினி லாரி உரிமையாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர் கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

’’மத்திய அரசு உடனடியாக கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து கட்டண உயர்வை அதிகரித்து வரும் மத்திய அரசு பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காக்க வேண்டும்’’ எனவும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன், ’’5% முதல் 25% அளவிற்கு இந்த சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் லாரியை நம்பி தொழில் செய்பவர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் வாடகைக் கட்டணங்கள் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறவிட்டால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப் போவதாக’’ தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.