இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கும் பணிகள் நவம்பர் 30இல் தொடங்கி, ஜூலை 2ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்தது. எனவே எதன் அடிப்படையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற ஐயப்பாடு எழுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தலை எவ்வாறு தவிர்ப்பது என இந்த அரசாங்கம் காரணத்தை தேடிக்கொண்டு அலைகின்றது. நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து, ஏன் நடத்தவில்லை என கேள்வி கேட்டுவரும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்.
மேலும், இதுவரை இல்லாத வகையில் கிராம பஞ்சாயத்து தேர்தல், ஊராட்சி தேர்தல், அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி என்று தனித்தனியாக தேர்தல் நடத்த ஆலோசனை நடப்பதாக தகவல் வருகின்றது. எந்த காலகட்டத்திலும் இதை ஏற்கமுடியாது. கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி தேர்தல் நடைபெறுமானால் நிறைய தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
அதேபோல் இத்தேர்தலை பார்வையிடவும் கண்காணிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு போதிய அவகாசம் இல்லாததால், ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலை முறையாகவும், எளிமையாகவும் நடத்த வேண்டும் என்றே நாங்கள் இக்கோரிக்கைகளை வைத்துள்ளோம்’ என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்' - அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்