கோவை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு உலக உணவு தினத்தையொட்டி வரும் அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர்கள் மற்றும் ரகங்களை காட்சிப்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை மற்றும் விதை சான்றளிப்பு துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் கலந்து கொள்வார்கள்.
உள்ளூர் மற்றும் பாரம்பரிய ரகங்களின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள், பாரம்பரிய உணவுகள் கண்காட்சி மற்றும் விற்பனை விவசாயிகளின் நலன் கருதி அவர்களிடம் உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கம் அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:100 ஆண்டுகளைக் கடந்தும் செயல்படும் கல்லீரல்கள் - ஆய்வில் தகவல்!