ETV Bharat / state

2023-இல் கோவையை உலுக்கிய 10 முக்கிய சம்பவங்கள்! - top 10 events of kovai

List of top 10 events in Coimbatore: உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2023ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற மிக முக்கிய 10 சம்பவங்களை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

2023ல் கோவையை உலுக்கிய 10 முக்கிய சம்பவங்களின் தொகுப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:08 PM IST

கோயம்புத்தூர்: கொங்கு மணடலத்தின் முக்கிய நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராக வலம்வரும் கோவை மாவட்டம் இன்றளவும் தமிழ்நாட்டில் தனக்கென சிறப்பை கட்டிக்காத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை வரவேற்கவிருக்கும் வேளையில், கோவை மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

1. ஈஷாவில் மாயமான பெண் சடலமாக மீட்பு: 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காகச் சென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண், 18ஆம் தேதி அங்கிருந்து மாயமானார். பின்னர் அது குறித்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2023 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று செம்மேடு பகுதியில் உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் சடலமாக அப்பெண் மீட்கப்பட்டார். இச்சம்பவம் கோவை மக்கள் மத்தியிலும், திருப்பூர் காவல் துறையினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2.நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை: பிப்ரவரி 13ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் இரண்டு இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் மறக்க முடியாத ஒரு குற்றச்சம்பவமாக அமைந்தது. இதையடுத்து காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கோத்தகிரியில் கைது செய்தனர். அதில் இருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம், கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில், அடுத்த மாதம் மார்ச் 23ஆம் தேதியன்றே நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியது. நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம் 1 நீதிமன்ற காத்திருப்போர் பகுதியில் கவிதா என்ற பெண் அமர்ந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த கவிதாவின் கணவர் சிவக்குமார் கவிதாவின் மீது ஆசிட் வீசிச் சென்றார்.

நீதிமன்றத்தில் இருந்த தப்ப முயன்ற சிவக்குமாரை வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்திற்குள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட கவிதாவிற்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியிலும், உள்ளும் நடைபெற்ற இந்த இரு வேறு பரபரப்பான சம்பவங்களால், நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

3.தருமபுரியில் பிடிபட்ட மக்னா யானை கோவையில் செய்த சம்பவம்: தருமபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி பொள்ளாச்சி வழியாக மதுக்கரை பகுதிக்குள் புகுந்தது. அவ்வாறு புகுந்த அந்த யானை, மதுக்கரை பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுப்புறச் சுவரை இடித்தது. மேலும் அதனை விரட்டச் சென்ற காவல்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து கோவை வனப்பகுதிக்குள் நுழைந்த அந்த மக்னா யானை, குனியமுத்தூர் பகுதிக்குள் நுழைந்தது. இதனை விரட்டுவதற்கு 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சின்னத்தம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டும், மயக்க ஊசி செலுத்தியும் மக்னா யானை பிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களாக கோவையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த அந்த யானை, பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை மருத்துவக் குழுவினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது கோவை மக்களிடையே மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

4. அதிக சத்துமாத்திரைகள் உட்கொண்ட பள்ளி மாணவிகள்: உதகை நகராட்சி காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்டனர். அதனையடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆம்புலன்ஸ் மூலம் பள்ளியிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழிநெடுகிலும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து, ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டனர். கோவை அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

5. வடமாநில மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வட மாநிலத் தொழிலாளிகள் மீது மக்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து அதிகமான வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்பினர். இதனால் தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினர்.

இருப்பினும் இச்சம்பவம் வட மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பினர். இச்சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில அரசு குழுவினர்கள் கோவை உயர் அதிகாரிகள் உடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.

6. கோவை குணா உயிரிழப்பு: கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல் நலக்குறைவால் மார்ச் 21ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சக நகைச்சுவை கலைஞர்கள் மத்தியிலும், மிமிக்ரி கலைஞர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

7. பெண் பேருந்து ஓட்டுநர் சர்மிளா: கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக இந்தாண்டு பலர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றார் ஷர்மிளா என்கிற இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் இணைந்து, பொது பயணிகள் பேருந்தை இயக்கினார். இவரை கோவை மக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். பொதுமக்கள் மட்டுமின்றி எம்பி கனிமொழி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்தில் பயணித்தனர். இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிகமான பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஊடகங்கள் மூலம் வெளியில் தெரிந்து, குறைந்த நாட்களில் அதிகமானவர்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்ற ஷர்மிளா, சில காரணங்களால் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா அவரது தந்தையுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுவதை தொடர்ந்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்துப் பேசினார். அப்போது, ஷர்மிளா அவருக்கு கால் டாக்ஸி ஓட்டுவதில் ஆசையென தெரிவித்ததையடுத்து, கமல்ஹாசன் ரூ.16 லட்சம் மதிப்புமிக்க சொகுசு காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: டிஐஜி விஜயகுமார் தற்கொலை தமிழ்நாடு காவல் துறையினர் மத்தியிலும், கோவை மாவட்ட மக்கள் மத்தியிலும் நினைவிலிருந்து மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. இவர் கோவை சரக டிஐஜி-யாக பணியாற்றி வந்த நிலையில், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ஜூலை 7ஆம் தேதி காலை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஓடிசி எனும் மன அழுத்தத்தின் காரணமாக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உடற்கூராய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதாக அப்போதைய ஏடிஜிபி அருண் தெரிவித்திருந்தார்.

9.ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்: நவம்பர் 27ஆம் தேதி கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிப்பதற்கு மாநகர காவல்துறை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் முதல் குற்றவாளி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பது கண்டறியப்பட்ட நிலையில், அவரது செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றைக் கொண்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சோதனையின்போது சுமார் 300 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

காவல்துறையினர் முதலில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கியிருந்த விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்து, அவரிடமிருந்து 3 கிலோ தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தருமபுரி இலங்கை அகதிகள் முகாமில் விஜய்யின் மாமியார் யோக ராணியை கைது செய்து, அவரிடம் இருந்தும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து விஜய்யை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டிய போலீசார், பல்வேறு தகவலின் அடிப்படையில் சென்னை கோயம்பேட்டில் வைத்து விஜய்யை கைது செய்து கோவை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

10. நாதே கவுண்டன்புதூர் மலையில் தீ பிடிப்பு: ஏப்ரல் மாதம் கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றிய காட்டுத்தீ இன்றளவும் கோவை மக்களின் நீங்கா நினைவாக இருந்து வருகிறது. கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை அடுத்த நாதே கவுண்டன் புதூர் அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலையில் ஏப்ரல் 12-ஆம் தேதி காட்டுத்தீ பற்றியது.

50 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பட்ட தீயை 40 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் இணைந்து அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், அங்கிருந்த செங்குத்தான பாறைகள் தீயணைப்புத் துறையினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தீ தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டது. இருப்பினும் தீ மளமளவென பரவியதால், தீயை அணைக்கும் பணியில் கடும் சிரமங்கள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். ஓரிரு நாட்களில் காட்டுத்தீ அணைக்கப்பட்டுவிடும் என கோவை மக்கள் எதிர்பார்த்த நிலையில், ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்ததால் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நாதே கவுண்டன் புதூர் மலையில் பற்றிய காட்டுத்தீயை சுமார் 8 நாட்களுக்குப் பிறகு போராடி அணைத்தனர்.

இதை தவிர்த்து தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம், ஆறு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற பாம்பே சர்க்கஸ், முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்கள் திறப்பு, வந்தே பாரத் ரயில் ஆகியவை கோவை மாவட்டத்தின் முக்கிய நிகழ்வின் வரிசையில் இடம்பெற்றது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. குவியும் சுற்றுலாப் பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.