ETV Bharat / state

அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட பார்: சீல் வைத்த கலால் துறையினர் - against government order

கோவை: அரசு உத்தரவை மீறி பாரை திறந்த மதுபானக்கடைக்கு கலால் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சீல் வைத்த கலால்துறையினர்
சீல் வைத்த கலால்துறையினர்
author img

By

Published : Mar 20, 2020, 4:58 PM IST

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, திரையரங்குகள், மால்கள், பார்கள் உள்ளிட்டவற்றை மூட அரசு உத்தரவிட்டது.

ஆனால், அரசின் இந்த உத்தரவை மீறி பொள்ளாச்சி-வால்பாறை சாலையிலுள்ள மதுக்கடையின் பார் வழக்கம் போல் இயங்கி வந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு வந்த புகாரின் பேரில் கலால் துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் உத்தரவை மீறி பார் திறக்கப்பட்டதால் கலால் துறை அலுவலர்கள் மதுபானக்கடைக்குச் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க:கரோனா: சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இத்தாலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.