ETV Bharat / state

எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு - LIC employees boycott work for an hour

கோவை: எல்ஐசி பங்குகளை விற்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு மணி நேர வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

LIC employees
LIC employees
author img

By

Published : Feb 4, 2020, 10:41 PM IST

மத்திய அரசு பட்ஜெட்டில், எல்ஐசி வைத்திருக்கின்ற பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு செய்தனர். இந்த வேலை புறக்கணிப்பு கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல எல்ஐசி சங்கங்களின் இணைச் செயலாளர் சுரேஷ், ”மத்திய அரசு பட்ஜெட்டில், எல்ஐசி சார்பாக உள்ள பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு நஷ்டங்களை மக்களும் எல்ஐசி ஊழியர்களும் சந்திக்க நேரிடும்.

எனவே அதைக் கண்டித்து இந்த வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்ஐசியின் பங்குகளைத் தனியார் பங்குச் சந்தைகளுக்கு தரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

Intro:எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு.

Body:மத்திய அரசு பட்ஜெட் தாக்குதலில் எல்ஐசி வைத்திருக்கின்ற பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன நடவடிக்கைகளுக்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு செய்தனர். இந்த வேலை புறக்கணிப்பதே கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் தங்கள் வேலைகளை புறக்கணித்துவிட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல எல்ஐசி சங்கங்களின் இணைச் செயலாளர் சுரேஷ் மத்திய அரசு பட்ஜெட் தாக்குதலின்போது எல்ஐசி சார்பாக உள்ள பங்குகளை பங்குச் சந்தையில் வைப்பது போன்ற பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்றும் இதனால் பல்வேறு நஷ்டங்களை மக்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் சந்திக்க நேரிடும் என்றும் எனவே அதை கண்டித்து இந்த வேலை புறக்கணிக்கும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தத்தில் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் பல நிலைகளில் உள்ள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசானது பட்ஜெட்டில் உள்ள பற்றாக் குறையை நிறைவு செய்வதற்காக எல்ஐசியில் உள்ள பங்குகளை பங்குச் சந்தையில் வைத்திருப்பது தவறு என்று குற்றம் சாட்டினார். இதை கைவிட்டால் வருகின்ற ஆண்டில் அரசு எதிர்பார்க்கின்ற தொகையை எல்ஐசி தர இயலும் என்று தெரிவித்தார். எனவே எல்ஐசியின் பங்குகளை தனியார் பங்கு சந்தைகளுக்கு தரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.