கோவை: பிரசித்தி பெற்ற கோவிலான மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில தினங்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அது குறித்து சோதனை செய்ய வேண்டும். எனவும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. அது கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
கோவிலில் தங்கத்தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரத்தின் முன்பகுதி வாயிலுக்கு அருகே உள்ள பகுதியில் சாதாரணமாக நடந்துசெல்லும் சிறுத்தையின் காட்சிகள் பதிவாகியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடியாக அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டுமென என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் உலவும் சிறுத்தை- ஷாக்கிங் வீடியோ!