ETV Bharat / state

வளர்ப்பு நாயை அடித்துக்கொன்ற சிறுத்தை!

பொள்ளாச்சி அருகே தோட்டத்திற்குள் புகுந்த, விவசாயியுடைய வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சிறுத்தையைக்கூண்டு வைத்துப்பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு செய்த வனத்துறை

author img

By

Published : Aug 8, 2022, 5:52 PM IST

கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகேவுள்ள புளியங்கண்டி கிராமமானது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்கள் முன்பு ஓட்டகரடு தனியார் தோட்டத்தில் இருந்த 8 ஆடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி விவசாயி ராசு தோட்டத்தில் இருந்த 2 வளர்ப்பு நாயையும் அடித்துக்கொன்றது.

இச்சம்பவத்துக்குப்பிறகு வனத்துறையினர் கண்காணிப்புக்கேமராக்களை வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப்பிறகு மீண்டும் இன்று (ஆக. 08) அதிகாலை வனப்பகுதியைவிட்டு வெளியே வந்த சிறுத்தை, விவசாயி ராசு தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்துக் கொன்றது.

இதனையடுத்து வனத்துறையினர் தற்போது ஆய்வு மேற்கொண்டதில், சிறுத்தையின் கால் தடம் இருப்பதை உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப்பகுதியிலுள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளதால், வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு செய்த வனத்துறையினர்

இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸில் குட்டி தூக்கம்போட்ட பூனை; பார்த்து சிரித்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.