ETV Bharat / state

காயம்பட்ட யானைக்கு சிகிச்சை : உதவிக்காக அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்!

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உடலில் காயங்களுடன் சுற்றி வரும் ஆண் காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக, சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளன.

coimbatore news  mettupalayam news  kumki elephants
கும்கி யானைகள்
author img

By

Published : Sep 14, 2020, 10:05 PM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் கால், உடல் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நடக்க முடியாமல் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இது குறித்து கடந்த 9ஆம் தேதி வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து காயம்பட்ட யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், காயத்துடன் சுற்றி வரும் ஆண் காட்டுயானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக, சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து 23, 35 வயதுடைய கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன.

கும்கி யானைகள்

தற்போது, தேக்கம்பட்டி செல்லும் சாலையிலுள்ள தனியார் தோட்டத்தில் இந்த இரண்டு யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து நாட்களாகவே வனத்துறையினர் காயம்பட்ட யானையைக் கண்காணித்து வருகின்றனர்.

அந்த யானை, வனப்பகுதியிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வரும்வரை காத்திருந்து அதன் பின்னர் மயக்க ஊசி செலுத்தி அதற்கு சிக்சையளிக்க மருத்துவக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். யானையின் உடம்பில் துப்பாக்கி குண்டு இருந்தால், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மயக்க ஊசி செலுத்தி, காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.