கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை விழாவின் இரண்டாம் நாளான இன்று (ஏப். 10) வாலாங்குளத்தில் லேசர் லைட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வண்ண வண்ண லேசர் ஒளி மூலம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் குறித்தும், கோவை மாவட்ட வரலாற்றை குறித்தும் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் திரைப்பட பாடல்கள், தேசிய பாடல்கள் ஆகியவைகளும் காட்சி படுத்தப்பட்டன.
இது அங்கிருந்த அனைத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மேயர் மற்றும் துணை மேயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி!