ETV Bharat / state

சந்தன மரக்கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி வனத்துறையினரிடம் கோரிக்கை!

கோவை: சந்தன மரக்கடத்தலைத் தடுக்க வனத்துறையினர் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kovai Sandalwood Smuggling
Kovai Sandalwood Smuggling
author img

By

Published : Jan 1, 2020, 4:17 AM IST

கடந்த சில நாள்களாக கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தன மரக் கடத்தல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சந்தன மரக் கடத்தலை இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.

கடந்த வாரம் சந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சந்தன மரக்கடத்தல் தொடர்பாக சிலரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஆனைகட்டி அருகேயுள்ள மத்திய அரசின் நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில், கடந்த இரண்டு நாள்களில் 8க்கும் மேற்பட்ட சந்தன மரங்களைக் கடத்தல்காரர்கள் வெட்டிக் கடத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், பறவைகள் ஆராய்ச்சி மையம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வனப்பகுதி வழியாக வந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இனிவரும் காலங்களில் சந்தன மரங்கள் வெட்டாமல் தடுக்க வனத்துறையினர், இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!

Intro:கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்தில் தொடர்ச்சியாக வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள், இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்..Body:அண்மைக்காலமாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சந்தன மரக் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த சந்தன மரக் கடத்தலை இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை, இந்நிலையில் கடந்த வாரம் சாய்பாபா காலனி போலீசார் சந்தன மர கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சந்தன மரக்கடத்தல் தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர் இந்நிலையில் கோவை ஆனைகட்டி அருகே உள்ள மத்திய அரசின் நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் கடந்த இரண்டு நாட்களில் 8க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை கடத்தல் காரர்கள் வெட்டி கடத்தி உள்ளனர் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளதால் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது இது குறித்து காவல் துறைக்கும் வனத்துறைக்கும் புகார் அளித்தும் இதுவரை கடத்தல்காரர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 8க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக வனத்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மத்திய அரசு நிறுவனத்தில் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும் மலைப்பகுதியில் இந்த பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வனப்பகுதி வழியாக வந்து சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாகவும், வனத்துறையினர் இரவு ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.